சோம்பேறிங்க.. முட்டாளுங்க., கோவிலுக்குள் ஷார்ட், டீசர்ட் அணிந்து வந்த பெண்ணை விளாசிய ஜெயம்ரவி பட நடிகை..! வைரலாகும் டுவீட்..!!kangana-ranaut-tweet-gone-viral

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பஷிநாத் கோவிலில் பெண் ஒருவர் இரவுநேர ஆடையான டவுசர் போன்ற  அணிந்துகொண்டு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சென்றார். அதனை போட்டோ எடுத்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில், இந்த பதிவை பகிர்ந்த இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் காட்டம் தெரிவித்துள்ளார்.

cinema news

மேலும் தனக்கு வாடிகனில் நடந்த நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். "இவை மேற்கத்திய ஆடைகள். வெள்ளைக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டவை. நான் ஒரு சமயத்தில் வாடிகனில் ஷார்ட்ஸ், டீசர்ட் அணிந்து சென்றபோது என்னை அந்த வளாகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை. 

நான் ஹோட்டலுக்கு சென்று உடைமாற்ற வேண்டியிருந்தது. சாதாரணமான இரவு ஆடைகளை அணிந்து கோவிலுக்கு வரும் இந்த கோமாளிகள் சோம்பேறிகள். இவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது. அத்தகைய முட்டாள்களுக்கு கடுமையான விதி இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.