அன்னைய்யா.. மீண்டும் வாருங்கள்!! உருக்கமாக நடிகர் கமல் வெளியிட்ட பதிவு! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கைசுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளது. மயக்கத்திலிருந்து மீண்டுள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா 🙏
இந்நிலையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில்,
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களும் வருத்தத்துடன் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.