சினிமா

அன்னைய்யா.. எஸ்.பி.பியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, உருக்கமாக வீடியோ வெளியிட்ட நடிகர் கமல்! கண்ணீர்சிந்தும் ரசிகர்கள்!

Summary:

Kamal tweet about spb

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்தபோதிலும் கடந்த மாதம் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு எக்மோ மற்றும்  வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் உடல் நலம் நன்கு தேறி வந்தது. இந்நிலையில் திடீரென நேற்று எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இந்தநிலையில் சங்கீத ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவரது இந்த மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும். எனக்கூறி அவருடன் இருந்த ஞாபகங்களை நினைவூட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement