அந்த படத்தில் நாங்கள் சொன்னது தற்போது நடந்து வருகிறது! வருத்தத்துடன் கமலஹாசன்!

Kamal talk about his film


Kamal talk about his film

ஹேராம் படத்தில் பேசிய எச்சரிக்கையும், அச்சங்களும் உண்மையாகிக் கொண்டிருப்பது வருத்தமானது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமலஹாசன் நடித்து, தயாரித்து இயக்கிய படம் ஹே ராம். இந்தத் திரைப்படம் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியானது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமை குறித்து  வலியுறுத்துவதாக அப்படம் அமைந்திருந்தது.

 தற்போது ஹே ராம் படம் வெளியாகி இருபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில்,  "ஹே ராம் படம் வெளியாகி 20 வருடங்கள் இன்றுடன் கடந்து விட்டது. இந்த படத்தை இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் பேசிய அச்சங்களும், எச்சரிக்கைகளும் நடந்து வருவது வருத்தமளிக்கிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள சமூக நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.