சினிமா வீடியோ பிக்பாஸ்

அடுக்கடுக்காக காரசாரமான கேள்விகளால் வச்சு செய்த கமல்.! பதிலளிக்க முடியாமல் விழிபிதுங்கிய கவின்.! வீடியோ இதோ..

Summary:

kamal questioned to kavin

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும்  இன்னும்இறுதி கட்டத்திற்கு  இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

Bigg Boss 3 - 20th September 2019 | Promo 1 க்கான பட முடிவு

மேலும் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். இதில் போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்துடனும், முழுமூச்சுடனும் கடுமையாக உழைத்து வருகின்றனர். மேலும் இதனால் போட்டியாளர்களுக்கிடையே கடுமையான மோதலும் ஏற்பட்டது .

அதாவது டாஸ்க்கில் சாண்டி லாஸ்லியா இடித்துவிடுகிறார் அதில் லாஸ்லியா கீழே விழுந்துவிட்ட நிலையில் கவின் சாண்டியிடம் சண்டைக்கு சென்றார். மேலும் லாஸ்லியாவிற்கும் கவினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கமல் இச்சம்பவம் குறித்து காரசாரமாக கவினிடம்  பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்க முடியாமல் கவின் தடுமாறும் நிலையில் ரசிகர்கள் கைதட்டி உள்ளனர். இந்த வீடியோ ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement