சினிமா

கமலின் பிறந்தநாள் தினத்தன்று வெளியான டீசர்.! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்! வைரல் வீடியோ!

Summary:

இன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் தினத்தன்று விக்ரம் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கமல் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இன்றைய அவரது பிறந்தநாள் தினத்தன்று விக்ரம் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் கமல் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனின் 232-வது திரைப்படம் ஆகும். இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் 2 நிமிட டீசரை கமல்ஹாசன் இன்று பகிர்ந்துள்ளார்.

அந்த டீசரில் கமல்ஹாசன், பெரிய விருந்து ஒன்றை தயார் செய்கிறார். மேலும் அதில் துப்பாக்கிகள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயார் செய்து அவற்றை மறைத்து வைக்கிறார். இதனையடுத்து விருந்துக்கு வரும் நபர்களுக்கு உணவை பரிமாறுகிறார். அதில் கமல்ஹாசனின் கம்பீர குரலில் ரசிகர்களை நோக்கி ஆரம்பிக்கலாங்களா? என கேள்வி எழுப்புகிறார். இந்த டீசர் வைரலாகி ரசிகர்களுக்கு இன்று பிறந்தநாள் விருந்தாய் அமைந்துள்ளது.


Advertisement