செம.. அஜித்தின் துணிவு தொடர்ந்து, ஹெச். வினோத்தின் அடுத்த படத்தில் நடிக்கபோவது இந்த மாஸ் ஹீரோவா?? சூப்பர் தகவல்!!

செம.. அஜித்தின் துணிவு தொடர்ந்து, ஹெச். வினோத்தின் அடுத்த படத்தில் நடிக்கபோவது இந்த மாஸ் ஹீரோவா?? சூப்பர் தகவல்!!


Kamal may act as hero in director H.vinoth next movie

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் கமல். அவர் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தை தொடர்ந்து கமல் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. இதற்கிடையில் கமல் நடிக்கும் புதிய படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இயக்குனர் எச். வினோத் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக அஜித் மற்றும் போனிகபூருடன் கூட்டணியில் இணைந்து துணிவு படத்தை இயக்கி வருகிறார்.

Ajith

பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான்  இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு துணிவு படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்தே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மாறுபட்ட ஆக்சன் கதையை ஹெச். வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.