அட.. இப்படி சொல்லிட்டாரே! தொகுப்பாளினி பிரியங்காவை பங்கமாய் கலாய்த்த கமல்! வைரலாகும் வீடியோ!!

அட.. இப்படி சொல்லிட்டாரே! தொகுப்பாளினி பிரியங்காவை பங்கமாய் கலாய்த்த கமல்! வைரலாகும் வீடியோ!!


Kamal kidding priyanga video viral

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான, உலக நாயகன் கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விக்ரம் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் நடிகர் கமல் இரவு, பகல் பாராமல் தொடர் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில்  விஜய் தொலைக்காட்சியிலும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அப்பொழுது மிகவும் கலகலப்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியான பிரியங்கா தான் செய்த செயலை கூறி அதற்கு தனக்கு தங்க நகை கொடுப்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் கைகொடுத்து அனுப்பிவிட்டார்கள் என்று கூற உடனே கமல் தங்க நகையை எப்படி அக்காவுக்கு போட முடியும் என பங்கமாக கலாய்த்துள்ளார். அதனை கேட்டு அனைவரும் சிரித்தனர். மேலும் பிரியங்கா ஷாக்காகியுள்ளார். இந்த வீடியோவை விஜய் டிவியே கட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரியங்காவை கலாய்த்துள்ளனர்.