விக்ரம் படத்தில் நடிகர் கமல் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா? செம கெத்துதான்! அதுவும் 15 வருஷத்திற்கு பிறகு...

விக்ரம் படத்தில் நடிகர் கமல் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா? செம கெத்துதான்! அதுவும் 15 வருஷத்திற்கு பிறகு...


kamal-going-to-act-as-police-in-vikram-movie

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, உலக நாயகனாக கொடிகட்டி பறக்கும் கமல் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது நடிகர் கமலின் 232வது படமாகும். இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்திற்கு நடிகர் அனிருத் இசையமைக்கவுள்ளார். அதுமட்டுமின்றி மலையாள நடிகர் பகத் பாசில் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

kamal

இதற்கிடையில் விக்ரம் படத்தில் கமல் நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளது.  அதாவது இந்த படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் கமல் இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டு வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பிறகு அத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.