சினிமா

கொஞ்சம் சொல்லுங்களேன்.. ப்ரேமம் பட இயக்குனரின் கேள்விக்கு பதிலளித்த உலகநாயகன்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து ராசுகரால் மத்தியில் மாபெரும்

கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, வசூல் சாதனை படைத்து செம ஹிட்டான பிரமாண்ட படமான தசாவதாரம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை நினைவுகூரும் வகையில் நடிகர் கமல் தனது  ஃபேஸ்புக் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அந்த புகைப்படத்திற்கு கீழ் நேரம், பிரேமம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், சார் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காட்சிகளை எப்படியெடுத்தீர்கள் என சொல்ல முடியுமா? படம் இயக்குவதில் 'தசாவதாரம்' பிஹெச்டி போன்றது என்றால், 'மைக்கேல் மதன காமராஜன்' டிகிரி கோர்ஸ் போன்றது. என நடிகர் கமலிடம் கேட்டு பதிவிட்டிருந்தார்.

  Premam director Alphonse Puthren to direct a Tamil film | Entertainment  News,The Indian Express

அதற்கு பதிலளித்த நடிகர் கமல், நன்றி அல்போன்ஸ் புத்திரன். விரைவில் கூறுகிறேன். அது எந்த அளவிற்கு கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவும் என தெரியவில்லை. ஆனால் எனக்கு அது நான் குறிப்பிட்டதுபோல மாஸ்டர் கிளாஸ். படம் வெளியாகி பல வருடங்கள் கழித்து இதுகுறித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது என கூறியுள்ளார்.


 


Advertisement