சினிமா

கணவரை பிரிந்த நிலையில் குழந்தையை தத்தெடுக்க துடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.! நடிகர் லாரன்ஸ்க்கு விடுத்த அன்பு வேண்டுகோள்!!

Summary:

kajal request lawrence to adapt child

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி தனது திரைபயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் பசுபதி. அதனைத் தொடர்ந்து அவர் வசூல்ராஜா, டிஷ்யூம், கள்வனின் காதலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் முக்கிய துணைகதாபாத்திரங்களில் நடித்துள்ளார்..

மேலும் பல சின்னத்திரை தொடர்களிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து காஜல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். காஜல் பசுபதி பிரபல நடன இயக்குனரும் பிக பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாண்டியின் முத்த; மனைவி ஆவார். அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் காஜல் பசுபதி, நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை இல்லாமல் ஒருவரது வாழ்வு முடிவடையாது. எனவே தற்போது தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுவதாகவும், அதற்கான முழு செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் குழந்தையை தத்தெடுக்க நீங்கள்தான் எனக்கு  உதவ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


Advertisement