தனுஷின் பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகை தானம்! யார் தெரியுமா?



kajal-agarwal-was-the-first-choice-for-dhush-polladhava

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பொல்லாதவன். வெற்றிமாறன், தனுஷின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படங்களில் இந்த பொல்லாதவன் படமும் ஓன்று.

ஒரு பைக்கை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக குத்து ரம்யா நடித்திருந்தார். படத்தில் இவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

kajal agarwal

முதலில் குத்து ரம்யா கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. தனுஷ் - காஜல் அகர்வாலை வைத்து படக்குழு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டது. ஆனால், ஒருசில காரணங்களால் காஜல் அகர்வால் பொல்லாதவன் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பிறகு பூனம் பாஜ்வா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவரும் வெளியேற்றப்பட்டு குத்து ரம்யா கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

kajal agarwal

kajal agarwal