குப்பையையும் அழகாக மாற்றிய காஜல் அகர்வாலின் அழகான புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் காஜல்.
இந்நிலையில் காஜல் புதிய பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ சூட் நடத்தி வருகிறார். இதன் ஒரு அங்கமாக சமீபத்தில் குப்பை அதிகமாக உள்ள பகுதியையும் தன்னுடைய அழகால் அழகாக்கிய காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.