காஜல் அகர்வாலின் திருமணம்.! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய காஜல்!

காஜல் அகர்வாலின் திருமணம்.! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய காஜல்!



kajal-agarwal-latest-photo-viral-Q4BDFB

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.

காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

#kajgautkitched 💛

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on


இந்தநிலையில், காஜல் அகர்வால் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று நடிகை காஜல் அகர்வால் மற்றும் தொழிலதிபர் கௌதம் கிச்லுவுக்கு மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் காஜல்.