வாவ்.. கியூட்டா இருக்கே! நடிகை காஜல் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? அவரது கணவர் வெளியிட்ட அறிவிப்பு!!

வாவ்.. கியூட்டா இருக்கே! நடிகை காஜல் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? அவரது கணவர் வெளியிட்ட அறிவிப்பு!!


Kajal agarwal baby name is neel kitchulu

தமிழ் சினிமாவில் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

 நடிகை காஜல் தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அதனை தொடர்ந்தும் பல படங்களில் கமிட்டான அவர் கர்ப்பமடைந்த நிலையில் படங்களிலிருந்து விலகினார். பின் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அவர் கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார். குழந்தைக்கு நீல் கிட்சிலு என பெயர் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.