வீடு தேடி வந்த வாய்ப்பை விட்டுட்டு இப்போ வருத்தப்படும் நடிகை.! சுப்ரமணியபுரம் பட வாய்ப்பு முதலில் இவருக்குத்தான் வந்துச்சாம்.!

வீடு தேடி வந்த வாய்ப்பை விட்டுட்டு இப்போ வருத்தப்படும் நடிகை.! சுப்ரமணியபுரம் பட வாய்ப்பு முதலில் இவருக்குத்தான் வந்துச்சாம்.!


Kadhal sandhiya missed hit movie chance

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றான சுப்ரமணியபுரம் படத்தில்  நடிக்க வாய்ப்பு தேடி வந்தும் அதைத் தவற விட்டது குறித்து தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் பிரபல நடிகை காதல் சந்தியா. 

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காதல் சந்தியா. குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த இவர், ஒரு காலகட்டத்தில் நல்ல படங்களை தேர்ந்தெடுக்க தவறியதால் சினிமா வாழ்க்கையில் இருந்தே வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

தற்போது திருமணம் முடிந்து கணவனுடன் குடும்ப வாழ்க்கையில் பிசியாகி விட்ட இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.

Kadhal Sandhiya

இந்நிலையில் தனக்கு வந்த பட வாய்ப்பு ஒன்று குறித்து மனம் திறந்துள்ளார் காதல் சந்தியா. 2008ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் சசிகுமார் அவர்கள் தந்து வீடு தேடி வந்து கதை சொன்னதாகவும், எனக்கு கதை பிடித்து இருந்தாலும் நடிக்க தயங்கியதால் அந்த வாய்ப்பை வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

அதற்காக இயக்குனர் என்மேல் கோபமாக இருப்பார் எனவும் உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் சார் எனவும் கூறியுள்ளார் காதல் சந்தியா.