சினிமா

கண்கலங்கவைக்கும் புகைப்படங்கள்.. பாழடைந்த ஆட்டோவில் அனாதையாக இறந்துகிடந்த காதல் பட நடிகர் பாபு..

Summary:

நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளிவந்த காதல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா

நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளிவந்த காதல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் பாபு. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்கள் இயக்கி இருந்தார். இப்படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் இன்றுவரை பிரபலம் என்றே கூறலாம்.

காதல் படத்தில் விருச்சிககாந்தாக நடித்திருந்த பாபு அவர்கள் காதல் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதன்பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதனால் வருமானம் இன்றி, அன்றாட சாப்பாட்டிற்கே சிரமப்பட்டுவந்த இவர் ஒருகட்டத்தில் கோவில்களில் பிச்சை எடுப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் கடும் மனஉளைச்சல், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் கடும் சிரமப்பட்டுவந்த நடிகர் பாபு ரோட்டு ஓரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பழைய ஆட்டோ ஒன்றில் தூக்கியபடியே உயிரிழந்துள்ளார். பாபு அவர்கள் மரணமடைந்த செய்தி சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 


Advertisement