கடாரம் கொண்டான் படத்திற்கு தடை! சோகத்தில் மூழ்கிய விக்ரம் ரசிகர்கள்!

கடாரம் கொண்டான் படத்திற்கு தடை! சோகத்தில் மூழ்கிய விக்ரம் ரசிகர்கள்!


kadaram kondan movie banned in malaysia


நடிகர் விக்ரம் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்துள்ள கடாரம் கொண்டான் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்தவர்கள் இப்படத்தினை சூப்பர் டூப்பர் ஹிட் என விமர்சித்து வருகின்றனர்.

தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இப்படத்தினை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். 

kadaram kondaan

இந்தப்படத்திற்கு தமிழக்தில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், மலேசியாவில் இப்படத்தை வெளியிடவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியா போலீஸை இந்த படத்தில் தவறாக சித்தரித்துள்ளதால்,Film Censorship Board of Malaysiaஇந்த படத்திற்கு தடை விதித்துள்ளது. இதனை பட விநியோகம் செய்யும் லோட்டஸ் பைவ் ஸாடார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனால் மலேசியாவில் உள்ள தமி ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

தமிழக்தில் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் இந்த படத்தினை கொண்டாடி வருகின்றனர். மேலும் கடாரம் கொண்டான் நேற்று சென்னை திரையரங்குகளில் மட்டும் ரூ.52 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.