சினிமா

காப்பான் பட வெற்றியை கொண்டாடிய படக்குழு! வசூல் மட்டுமே இத்தனை கோடியா - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Summary:

Kaappan success party

இன்றைய தலைமுறையில் விஜய், அஜித்தை தாண்டி அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் சூர்யா. இவர் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK படத்தை தொடர்ந்து இயக்குனர் K.V. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆர்யாவின் மனைவி சாயிஷா நடித்திருந்தார். 

மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்திலும், படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சிரச் ஜானி நடித்திருந்தார்கள். 

மேலும் இந்த ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் தற்போது படக்குழு இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி இப்படத்தின் வெற்றியினை பார்ட்டியாக கொண்டாடியது மட்டுமின்றி லைகா நிறுவனம் காப்பான் படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 


Advertisement