சினிமா

கடல் கடந்து வாடும் உழைக்கும் மக்களுக்கு கண்ணீர் காணிக்கை! வெளியானது க/பெ ரணசிங்கம் பட பாடல்!

Summary:

Ka pae ranasingam movie third song released

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ.ரணசிங்கம்.  இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவருடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசைமையத்துள்ளார். மேலும் இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். இந்நிலையில் இப்பட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதைத் தொடர்ந்து தற்போது பறவைகளா! பறவைகளா! என்ற பாடல் வெளியாகியுள்ளது. தங்களது குடும்ப வறுமையை தீர்க்க கடல்தாண்டி வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கும், அவர்கள் நினைவில் ஏங்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சமர்ப்பணம் என குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பாடல் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.


Advertisement