நடிகை ஜோதிகா மும்பையில் செட்டிலாக உள்ளாரா... என்ன காரணம் தெரியுமா.?

நடிகை ஜோதிகா மும்பையில் செட்டிலாக உள்ளாரா... என்ன காரணம் தெரியுமா.?


Jyothika settled in Mumbai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார் ஜோதிகா. மேலும் நடிகை ஜோதிகா கணவருடன் இணந்து 2 டி எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Jyothika

இந்நிலையில் தற்போது சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து 2D தயாரிப்பு நிறுவனம் மூலம் பாலிவுட் படங்களை அதிக அளவில் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்களாம்.இதன் காரணமாக இருவரும் மும்பையிலேயே செட்டிலாகும் முடிவை எடுத்திருப்பதாக  தகவல் பரவி வருகின்றது. 

Jyothika

ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யா ஜோதிகா தம்பதியினர் வெளியிடவில்லை. ஆனால் நடிகை ஜோதிகா மும்பை பொதுவெளியில் காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இந்த தகவல் உண்மை என்பது போலவே நினைக்க வைக்கின்றது.