நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு நடனம் ஆடிய நடிகை ஜோதிகா - குவியும் பாராட்டுகள்!Jothika dance very cute

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன், பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. அவர் பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்குப் பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி தனது குடும்பத்தினரை கவனித்து வந்தார்.

இதனை தொடர்ந்து ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதனை தொடர்ந்து காற்றின் மொழி நாச்சியார் என பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில்  ஜோதிகா தற்பொழுது ஜாக்பாட் என்ற திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். 

jackpot

மேலும் இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி,யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் ஜாக்பாட் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு நடனம் ஆடியுள்ளார் என பாராட்டியுள்ளனர். 

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.