சினிமா

அட.. நண்பன் பட மில்லி மீட்டரா இது! தாடி, மீசைனு ஆள் அடையாளமே தெரியாம வேறு லெவலில் இருக்காரே!!

Summary:

அட.. நண்பன் பட மில்லி மீட்டரா இது! தாடி, மீசைனு ஆள் அடையாளமே தெரியாம வேறு லெவலில் இருக்காரே! செம ஷாக்கான நெட்டிசன்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி அனைத்து வயதினர் மத்தியிலும்  மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1. நடன நிகழ்ச்சியான இதில் கலந்து கொண்டதற்கு பிறகு பலரும் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமாகி பெரும் பிரபலங்களானர்.

இவ்வாறு சிறுவயதிலேயே ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ரின்சன். அதனைத் தொடர்ந்து அவர் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர் ரின்சன் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான நண்பன் திரைப்படத்தில் மில்லிமீட்டர் என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அவர் தற்போது நன்கு வளர்ந்து தாடி, மீசை என ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு வேறு லெவலில் மாறியுள்ளார். இந்நிலையில் ரின்சன் பாவக்கதைகள் வெப் சீரிஸ்ஸில் நரிக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த ஜாபருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் மில்லிமீட்டர் இப்போ சென்டிமீட்டர் ஆகிட்டாரே என சர்ப்ரைஸ் ஆகியுள்ளனர்.


Advertisement