சினிமா

ஜெயஸ்ரீயை தீபாவளி பார்ட்டிக்கு அழைத்தது நான் தான்! உண்மையை கூறிய பிக்பாஸ் பிரபலம்!

Summary:

Jayasri reshma

சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் ஈஸ்வர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதாவது தனது கணவர் மகாலட்சுமி என்ற சீரியல் நடிகையும் தொடர்பில் இருப்பதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டாதாகவும் புகார் செய்தார்.

இதனால் ஈஸ்வர் கைது செய்யப்பட்டார். பின்னர் வெளியே வந்த ஈஸ்வர் ஜெயஸ்ரீ கூறுவது அனைத்து பெய் என மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி ஜெயஸ்ரீ தீபாவளி தினத்தன்று மகாலட்சுமியின் கணவருடன் பார்ட்டிக்கு சென்று குடித்து விட்டு ஆட்டம் போட்டதாக கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி தனது மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் தவறான உறவு இருப்பதாகவும் கூறினார். அதனை குறித்து பிக்பாஸ் பிரபலம் ரோஷ்மா சமீபத்தில் நடைப்பெற்ற பேட்டியில் கூறியுள்ளார். அதாவது கடந்த தீபாவளிக்கு ஜெயஸ்ரீயை பார்ட்டிக்கு அழைத்தது நான் தான் என கூறியுள்ளார்.

மேலும் ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவருக்கு இடையே இருப்பது ஒரு அண்ணன், தங்கை உறவு மட்டுமே அந்த உறவை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார். 


Advertisement