அடபாவமே.. மனைவியிடம் அநியாயமாக தோற்றுப்போன ஜெயம் ரவி! வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!

அடபாவமே.. மனைவியிடம் அநியாயமாக தோற்றுப்போன ஜெயம் ரவி! வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!


jayamravi-exercise-with-wife-video-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் அதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், நிமிர்ந்து நில், பூலோகம் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த பூமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்ப்பையே பெற்றது. நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவரது மனைவி ஆர்த்தி மிகவும் எளிமையாக செய்த சவாலை ஜெயம் ரவியால் செய்ய முடியவில்லை. இந்நிலையில் மனைவியுடன் தோற்றுப்போன வீடியோவை பகிர்ந்த ஜெயம் ரவி, பெண்கள் எதையும் செய்யலாம். உங்கள் அன்புக்குரியவருடன் இதை முயற்சிக்கவும்! நீங்களெல்லாம் வலுவான பெண்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.