சினிமா

என்ன இப்படி மாறிட்டாரே... நடிகர் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம்... எப்படி உள்ளார் பாருங்கள்.!

Summary:

என்ன இப்படி மாறிட்டாரே... நடிகர் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம்... எப்படி உள்ளார் பாருங்கள்.!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறும். மேலும் ஜெயம் ரவிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அவர் இறுதியாக பூமி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஜெயம் ரவி ஆளே மாறிய நிலையில் வெள்ளை தாடியுடன் மிகவும் குண்டான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.


Advertisement