வாவ்.. மனைவி மற்றும் மகன்களுடன் நடிகர் ஜெயம் ரவி! வைரலாகும் செம க்யூட் லேட்டஸ்ட் புகைப்படம்!!

வாவ்.. மனைவி மற்றும் மகன்களுடன் நடிகர் ஜெயம் ரவி! வைரலாகும் செம க்யூட் லேட்டஸ்ட் புகைப்படம்!!


jayam-ravi-family-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறும். மேலும் ஜெயம் ரவிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அவர் இறுதியாக பூமி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த அழகிய ஜோடிக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவியின் முதல் மகன் ஆரவ் அவரது தந்தையுடன் இணைந்து டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி அவரது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Jayam ravi