சினிமா

விஜய் சொன்னதை ஜனனி செய்தார் என்ன தெரியுமா

Summary:

janani-doing

 சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்னதை தான் நிஜத்தில் செய்து கொண்டிருப்பதாக ஜனனி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் அனைத்து வீடுகளிலும் பிரபலமாகியுள்ளார் ஜனனி. வெஷ பாட்டில் என்று பெயர் எடுத்தாலும் அவரால் பிக் பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனை எதுவும் வரவில்லை.அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று சமத்தாக இருந்தார்.

வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ஜனனிக்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் தனி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் அவரை பலருக்கு தெரிந்துள்ளது. அவரின் உண்மையான குணம் பற்றி மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர். ஜனனி என்றால் அமைதியான, ப்ரெண்ட்லியான பெண் என்று பெயர் வாங்கியுள்ளார்.

ஜனனிக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது அஜித்தாம். பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வந்த பிறகு அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் அவர் படங்கள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். பிக் பாஸுக்கு பின் ஜனனியின் கெரியர் உச்சத்தை அடையட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.

வரலாற்று கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறார் ஜனனி. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தயாராக உள்ளார் அவர். ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கி ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும் கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என்றார் விஜய். அதை தான் நிஜத்தில் கடை பிடிப்பதாக பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ஜனனி.

 


Advertisement