பிக்பாஸ் ஜனனி ஐயருக்கு குவியும் பட வாய்ப்புகள். சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.janani-aiyar-new-move--simputhevan

தற்பொழுது தனியார் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்- 2. துவக்கத்தில் பிக் பாஸ்-1 ஐ போன்று சுவாரஷ்யமாகவும் , விறுவிறுப்பாகவும் இல்லை என்று விமர்சிக்கப்பட்டாலும்,  தற்சமயம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் பிக்பாஸ்-1 ஐ விட மிகவும் பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

இந்நிலையில் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட  டாஸ்க்குகளில் வெற்றி பெற்றதால் நடிகை ஜனனி ஐயர் நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார். இதன் விளைவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் அவருக்கு பட வாய்ப்புகள் நிறைய காத்திருக்கின்றன.  அந்த வகையில் 

“இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், 23ஆம் புலிகேசி, புலி” போன்ற படங்களை 
தமிழில் இயக்கியவர் இயக்குனர் சிம்பு தேவன். இவர் தற்போது இயக்கப்போகும் புதிய  படத்தில் ஜனனியை நடிக்கவைக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

 

Tamil Spark

 

மேலும்,  ஜெய், வைபவ், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கவுள்ளது. எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சில் இருந்து ஜனனி வெளியே வந்ததும் அவரிடம் இந்த படம் பற்றிய பேச்சுவார்த்தையில் இயக்குனர் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.