"அவர் போடுவதெல்லாம் மியூசிக்கா..."? மீண்டும் ஒரு இசையமைப்பாளரை வம்புக்கு இழுத்த ஜேம்ஸ் வசந்த்!

"அவர் போடுவதெல்லாம் மியூசிக்கா..."? மீண்டும் ஒரு இசையமைப்பாளரை வம்புக்கு இழுத்த ஜேம்ஸ் வசந்த்!


james-vasanth-creates-a-new-controversy-with-anirudh

சினிமாவில் நீண்ட நாட்களாக போராடி  சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்த். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இவர் தற்போது இசையமைப்பாளர்களை தொடர்ந்து விமர்சித்து வருவது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இசைஞானி இளையராஜாவை சமீபத்தில் விமர்சித்து இருந்தார். அவர் பேசும் விதம் மற்றும்  அவர் கூறிய கருத்துளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#jamesvasanth

தற்போது இசையமைப்பாளர் அனிருத்தையும் விமர்சித்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்த். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் அனிருத்  ரசிகர்களால் 'ராக் ஸ்டார்' என அழைக்கப்படும்  இவரது பாடல்கள் எல்லாமே சமீப காலமாக மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கின்றன.

.#jamesvasanth

 இந்நிலையில் ஒரு பேட்டியில் இவர் பற்றி கூறியிருக்கும் ஜேம்ஸ் வசந்த், அனிருத் தொடர்ந்து ஒரே மாதிரி இசையை கொடுத்து வருவதாகவும் ராக் மற்றும் அதிரடி இசையையை கொண்டே தன்னுடைய காலத்தை ஓட்டி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். பிரியாணி என்றாலும் ஒரு நாள் சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்  அதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  தெகட்டிவிடும் அது போல் தான் இசையும் எனக் கூறியிருக்கிறார் ஜேம்ஸ் வசந்த்.