நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது ஜெயிலர் படத்தின் முதல் பாடல்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவ ராஜ்குமார், திரிஷா கிருஷ்ணன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரம் கொண்ட ஜெயிலர் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில், ஜெயிலர் படத்தின் பாடல் கேட்டு ரசிகர்கள் தொந்தரவு செய்துவந்த நிலையில், படத்தின் காவலா எனும் பாடல் நாளை மாலை 6 மணியளவில் வெளியாகிறது.