"அப்படி போடு..." ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.? அப்டேட் வந்தாச்சு!

"அப்படி போடு..." ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.? அப்டேட் வந்தாச்சு!



jailer-movie-first-single-update

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம்  ஜெயிலர். இத்திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கோலமாவு கோகிலா  டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார்.

இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார்,சுனில் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என படக் குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Jailer

மேலும்  ஜெயிலர் படம் தொடர்பான ப்ரோமோ வீடியோவையும் சில  நாட்களுக்கு முன்பு  சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

Jailer

அந்தத் தகவல்களின் அடிப்படையில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல்  வருகின்ற ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து விரைவிலேயே பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடத்தவும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.