கண்முன் விபத்தை பார்த்து கலங்கிப்போன நடிகை.. எதிர்பாராமல் செல்போன் கேமிராவில் சிக்கிய பதைபதைப்பு காட்சிகள்.!

கண்முன் விபத்தை பார்த்து கலங்கிப்போன நடிகை.. எதிர்பாராமல் செல்போன் கேமிராவில் சிக்கிய பதைபதைப்பு காட்சிகள்.!



Italy Actress Gayathri Joshi Capture Video of Accident When He ride with Husband in Car

 

பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானுடன் ஸ்வதேஷ் படத்தில் நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி. 

இவரின் கணவர் விகாஷ் ஒபுராய். தம்பதிகள் இருவரும் தங்களின் காரில் இத்தாலியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தனர். 

அப்போது, இவர்களின் வாகனத்தை முந்தியபடி விலையுயர்ந்த கார்கள் அணிவகுத்து சென்றன. அதனை காயத்ரி வீடியோ எடுத்தவாறு பயணித்தார். 

இந்நிலையில், நடிகை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோதே, லம்போகினி கார் டிரக் மீது மோதி விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் விலையுர்ந்த காரில் இருந்த இளம் தம்பதிகள் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே பலியாகினர். நடிகை எடுத்த விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.