அம்பானி வீட்டு திருமணத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஐஸ்வர்யா ராய்! ஏன் தெரியுமா?

அம்பானி வீட்டு திருமணத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஐஸ்வர்யா ராய்! ஏன் தெரியுமா?


ishwarya-rai-very-beautiful-in-ambani-son-marriage

இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவிற்கும் மும்பை ஜியோ சென்டரில் நேற்று மிகவும் பிரம்மாண்டமாகவும், ஆடம்பரமாகவும் திருமணம் நடைபெற்றது.

திருவிழாவைப்போல் நடைபெற்ற இந்த திருமணத்தில் பல மொழி திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் முக்கிய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

aishwarya rai

பல பிரபலங்களும் கலந்து கொண்ட இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரது கவனத்தையும் பெருமளவில் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யா அவரது மகள் ஆராத்யா மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொண்டார் . அப்போது அவர் நீல நிற லெஹெங்கா அணிந்து மிகவும் பளிச்சென தேவதை போல வருகை தந்திருந்தார்.இதனை கண்ட அனைவரும் அலைகள் ஈர்க்கப்பட்டனர்.

aishwarya rai
 
அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.