கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
கஸ்த்தூரியின் பதிவை வயலன்ஸ் என்று தூக்கிய இன்ஸ்டகிராம் நிறுவனம். அப்படி என்ன பதிவு அது?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கஸ்த்தூரி. தற்போது சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவரும் இவர் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் மூன்றில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினர்.
ஓரிரு வாரங்களிலையே வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட இவர் சீக்ரெட் அறைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாமென்று கூறிவிட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு நடையை கட்டினார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ஏதவது கருத்து கூறி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
இந்தமுறை நடிகை கஸ்த்தூரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராம் பாலிசியை மீறியது என கூறி இன்ஸ்டாக்ராம் நிறுவனம் அந்த புகைப்படத்தை டெலிட் செய்துள்ளது.
அப்படி அந்த பதிவில் கஸ்த்தூரி என்ன பதிவிட்டிருந்தார் என தெரியாத நிலையில் தான் பதிவிடும் போஸ்டுகள் தொடர்ச்சியாக நீக்கப்படுவதாகவும், அப்படி நான் என்ன விதியை மீறிவிட்டேன் எனவும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு கேள்வி கேட்டு போஸ்ட் செய்துள்ளார் கஸ்த்தூரி.