சினிமா

சூப்பர்.. பிக்பாஸ் 5ல் கலந்துக்கொள்கிறாரா இந்த இளம் யூடியூப் பிரபலம்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல நன்கு பரிச்சயமான பிரபலங்களும், மேலும் அறிமுகமில்லாத சிலரும் போட்டியாளர்களாக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளனர்.

பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் மற்றும்  பிக்பாஸ் சீசன் 4 ல் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 
இந்த நிலையில் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் யூடியூப் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்த இனியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இனியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement