கமலுடன் இணையபோகிறாரா கார்த்திக்?.. ஆவலுடன் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!Indian 2 movie update

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கப்போவதாக அறிவித்துள்ள திரைப்படம் "இந்தியன் 2". இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில், பல காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டன. 

Ulaganayagan kamalhaasan

அதன் பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களது கவனத்தை செலுத்திய நிலையில், "விக்ரம்" படத்தின் வெற்றிக்கு பின் கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இந்தியன் 2 நிச்சயம் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், காஜல் அகர்வால் அதனை மறுத்து படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. நான் தான் கதாநாயகி என்று தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியன் 2 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

Ulaganayagan kamalhaasan

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கார்த்திக் சமீப காலங்களாகவே வெளிவரும் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துவந்தது குறிப்பிடத்தக்கது.