இந்தியா சினிமா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மரணம்; சோகத்தில் மூழ்கியுள்ள திரை உலகம்.!

Summary:

india cinima villan mahesh anand death

தமிழ், இந்தி சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வந்த மகேஷ் ஆனந்த் மரணமடைந்து அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்திய சினிமாக்களில் 1980-90 கால கட்டங்களில் மிகவும் பிஸியாக நடித்து பிரபலமடைந்தவர் வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வீரா என்ற படத்திலும் கேப்டன் விஜயகாந்தின் பெரிய மருது என்ற படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மொத்தம் 200 படங்களுக்கு மேல்  நடித்துள்ளார் மகேஷ் ஆனந்த். மேலும், பாலிவுட் சினிமாவில் தர்மேந்திரா, கோவிந்தா, அமிதாப் பச்சன், சன்னி தியோல் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டில் உஷா பச்சானி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், பிறகு 2002ம் ஆண்டில் விவகாரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


 
தற்போது மும்பை வெர்சோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனிமையாக வாழ்ந்து வந்த இவரின் உடல்கள் அழுகிய நிலையில் போலீசார் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறையில் அவரைச் சுற்றிலும் மதுபாட்டில்கள் கிடந்துள்ளது. தற்போது திரையுலகினர் பலர் மகேஷ் ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  


Advertisement