அம்மாவான லேடி சூப்பர் ஸ்டார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

அம்மாவான லேடி சூப்பர் ஸ்டார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!


imaika-nodikal-movie-nayanthara

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் இமைக்கா நொடிகள்.. அந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் மானஸ்வி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அந்த படத்தில் அந்த குழந்தை மானஸ்வி பேசிய வசங்கள் யாவும் மக்கள் மனதில் என்று மறையா வண்ணம் இருந்தது. அதிலும் குறிப்பாக நயன்தாராவை கொடுமைப்படுத்த வரும் ஒரு போலீஸ்காரரிடம் மானஸ்வி ‘சொட்ட சொருகிடுவேன்’ என்று கூறும் வசனம் மிகவும் பிரபலமானது. அடிக்கடி நயன்தாரா மானஸ்வியுடன் பேசுவார். மானஸ்வி நயன்தாராவை அம்மா என்றுதான் அழைக்கிறார்’ என்றார்... 

காமெடி நடிகர்  கொட்டாச்சியின் மகள் தான் இந்த குழந்தை மானஸ்வி.  மேலும் குழந்தை மானஸ்வி இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை 2 படத்தில் திரிஷாவின் மகளாக நடிக்கிறார். இவருக்கு இன்னும் 20 படங்கள் மானஸ்வி கைவசம் இருக்கிறது.

இந்நிலையில் காமெடி நடிகர் கொட்டாச்சி மகள் பற்றி தெரிவிக்கும்போது ‘அவள் சினிமா காட்சிகளை காப்பி செய்து நடித்த சில காட்சிகளை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்டேன். அதை பார்த்துவிட்டு தான் இமைக்கா நொடிகள் பட வாய்ப்பு வந்தது. நான் சின்னதாக காமெடியன் வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால் எனது மகள் பெரிய நடிகையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.