80களில் வெளியான சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா..!

தமிழ் சினிமாவில் அன்றும் முதல் இன்றும் வரை சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினி காந்த். இவர் இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது.
ரஜினி நடிப்பில் 80களில் வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் தான் முரட்டுக்காளை. இப்படத்தில் ரதி அக்னிகோத்ரி, ஜெய் சங்கர், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் மற்றும் சுமலதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார்.
மேலும் முரட்டு காளை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் பின்னணி இசை அமைத்து தர முடியாது என இளையராஜா கூறியுள்ளார்.
அதனை அடுத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து படத்தின் முந்தைய காட்சிகளில் இருந்த பின்னணி இசையை வைத்து கிளைமாக்ஸ் அமைத்துள்ளார்கள்.