
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இந்த தொடர் சித்ராவின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்திருந்தது.
இந்நிலையில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி தனது திறமையால் ஏராளமான சவால்களை கடந்து வெள்ளித்திரை வரை முன்னேறிய அவருக்கு சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மக்களின் நாயகி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதும் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் அவரது ரசிகர்கள், ஒருவேளை சித்ராவே வந்து அந்த விருதை பெற்றிருந்தால் எப்படியிருந்திருக்கும் என கற்பனையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது வைரலாகி பார்ப்போர் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
Advertisement
Advertisement