தமிழகம் காதல் – உறவுகள்

ஆறு வருடங்கள் கழித்து கர்ப்பமான நிலையில், கணவருடன் தூக்கில் தொங்கிய மனைவி.! கடிதத்தை கண்டு பேரதிர்ச்சி அடைந்த உறவினர்கள்!!

Summary:

husband wife commit suicide for money issue

கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லாண்டி நகரில் வசித்து வந்தவர் குமரன். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜெரினா இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். அதனை தொடர்ந்து ஜெரினா  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார். 

இதனால் கணவன் மனைவி இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்துவந்தனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை வெகுநேரமாகியும் தூங்க சென்ற தம்பதியினர் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்கள் அவர்களது வீட்டு ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். 

    

 அங்கு குமரன் மற்றும் மூன்று மாத கர்ப்பிணியான ஜெரினா இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீஸாரிடம் தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஜெரினா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. 

அதில் அவர் எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. நாங்கள் நிறைய கடன் வாங்கி விட்டோம்.  அந்த கடனை திருப்பித் தர முடியவில்லை. நிம்மதியாக வாழவும் முடியவில்லை. அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.சொந்தக்காரர்கள் யாராவது எங்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை விற்று கடன்களை அடைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று எழுதியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement