என்னால மறக்க முடியல! திருமணத்திற்கு பிறகும் முரண்டுபுடிச்ச இளம்மனைவி! துடிதுடிக்க கணவர் செய்த காரியம்!!



Husband killed wife near sengottai

தென்காசி மாவட்டம் கேசவபுரம் அருகேயுள்ள கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. 20 வயது நிறைந்த இவருக்கு புளியங்குடியைச் சேர்ந்த 38 வயது நிறைந்த கண்ணன் என்பவருடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. முதல் மனைவி பிரிந்து சென்றதால் கண்ணன் கஸ்தூரியை 2வதாக திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் கோபித்துக் கொண்டு கஸ்தூரி தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு கடை ஒன்றில் வேலைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாட்டி வீட்டிற்கு சென்ற கஸ்தூரியை அழைத்து செல்வதாக கூறி கண்ணன் சென்றுள்ளார். மேலும் பாட்டியும் அவர் வேலைக்கு சென்றுள்ளார் வந்ததும் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சில நிமிடம் அங்கேயே காத்திருந்த கண்ணன் திடீரென அங்கிருந்து கிளம்பியுள்ளார். பின்னர் புளியரை சாலையில் 2 லாரிகளுக்கு பின்னால் பதுங்கியிருந்த அவர் வேலை முடிந்து அந்த வழியாக வந்த கஸ்தூரி மீது பைக்கால் மோதியுள்ளார். பின்னர் கீழே விழுந்த கஸ்தூரியை பெரிய அரிவாளால் சராமரியாக வெட்டியுள்ளார். இதில் துடிதுடித்து கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து கண்ணனை கைது செய்தனர்.

marriage

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கஸ்தூரி திருமணத்துக்கு முன்பே இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் கஸ்தூரி அவரையே நினைத்துக் கொண்டிருந்தார். மறக்க முடியாமல் அவருடனே வாழ போவதாக முரண்டு பிடித்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையிலேயே ஆத்திரமடைந்து கஸ்தூரியை கொலை செய்ததாக கண்ணன் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.