கொரோனா ஊரடங்கில், ரசிகர்களை குஷியாக்கி அனல்பறக்க வெளிவந்த பிக்பாஸ் ப்ரமோ! உற்சாகத்தில் ரசிகர்கள்!hindi-bigboss-season-14-released

பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் இந்தியில்  தொடங்கப்பட்டு  இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. இவ்வாறு  பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துவந்த இந்த நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கிலும், அதனைத்தொடர்ந்து மலையாளத்திலும் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இத்தகைய கொரோனா பரவல் இல்லாமல் இருந்திருந்தால் அனைத்து மொழிகளிலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியிருக்கும். 

இந்த நிலையில் ஹிந்தியில்  பிக்பாஸ் சீசன் 14 தொடங்கவிருப்பதாக தற்போது ப்ரமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், விவசாயம் செய்து பின் மாற்றம் வேண்டும் என தனது ஸ்டைலில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் நிகழ்ச்சி வரும் செப்டம்பரில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ப்ரமோ வைரலான நிலையில் தமிழிலும் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க படலாம் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.