விடாமுயற்சி படத்தில் இணையும் பாலிவுட் நடிகை? வெளியான அசத்தல் தகவல்.!



Hema kroshi in Ajith in vidamuyarchi movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தத் திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

Ajith

இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியான நிலையில், தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை.

இதனிடையே சமீபத்தில் வெளியான தகவலின் படி அடுத்த மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா அல்லது நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Ajith

இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.