சினிமா

நோட்டா படத்திற்கு தமிழில் வாழ்த்து கூறிய பிரபல கிரிகெட் வீரர்...!

Summary:

harbajanappriciatenotateam

நோட்டா படத்திற்கு தமிழில் வாழ்த்து கூறிய பிரபல கிரிகெட் வீரர்...! 

தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெட்ரா திரைப்படம் "அர்ஜுன் ரெட்டி" திரைப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது முதல் முறையாக தமிழில் நாயகனாக அறிமுகம் ஆகிறார். தமிழில் அவர் நடித்திருக்கும் படம் பெயர் "நோட்டா" . இந்த படத்திற்கு வரவேற்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இன்று வெளியாகிறது. இதனை இருமுகன் இயக்குனர் அனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். 

மேலும் இந்த படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங், விஜய் தேவரகொண்டாவிற்க்கு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ் மக்கள் வாழவைக்கும் தெய்வம் உங்கள் படம் நன்றாக வரட்டும் தம்பி என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 

வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள் @TheDeverakonda @put_chutney @StudioGreen2 pic.twitter.com/mmHiluQXCs

— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 4, 2018

 

 


Advertisement