மீம்களின் நாயகன்., கிங் லெஜெண்ட் ஆஃப் காமெடி.. வைகைப்புயல் வடிவேலுவுக்கு இன்று பிறந்தநாள்..! குவியும் வாழ்த்துகள்..!!

மீம்களின் நாயகன்., கிங் லெஜெண்ட் ஆஃப் காமெடி.. வைகைப்புயல் வடிவேலுவுக்கு இன்று பிறந்தநாள்..! குவியும் வாழ்த்துகள்..!!



Happy birthday vadivelu

மதுரையில் செப்டம்பர் 12, 1960 ஆம் ஆண்டு குமார வடிவேல் என்ற இயற்பெயரை கொண்ட வடிவேல், நடராஜன் பிள்ளை - வைத்தீஸ்வரிக்கு மகனாகப் பிறந்தவர். முதலில் சிறு சிறு நாடகங்களில் நடித்து வந்த வடிவேலு, தந்தையின் இழப்பால் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதுரையில் இருக்கும் கண்ணாடி பிரேம் கடையில் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது நடிகர் ராஜ்கிரண் அறிமுகம் கிடைக்க அதன் மூலமாக சென்னைக்கு வந்த வடிவேலு, டி.ராஜேந்தர் இயக்கத்தில் "என் தங்கை கல்யாணி" திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே' படத்திலும் நடிக்க வைத்தார்.

Vadivelu

திரைப்பட வாழ்க்கையில் நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும் இருந்து வரும் வடிவேலுக்கு சரோஜினி என்ற மனைவியும், கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா கலைவாணி என்ற மகள்களும், சுப்பிரமணியன் என்ற மகனும் உள்ளனர். 

தனது நகைச்சுவை பாணியால் பலரையும் கவரும் வடிவேலு, இன்றளவில் பல மீம்களுக்கு டெம்ப்லேட்டாகவும் வலம் வருகிறார். அரசியல் ஈடுபாடு கொண்டு பேசிய வடிவேலு, சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வந்த நிலையில், இறுதியாக அவர் நடிப்பில் வெளியான படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை.

இப்பவே கண்ண கட்டுதே, இன்னுமா இந்த ஊர் நம்மை நம்பிகிட்டு இருக்கு, சின்ன புள்ளத்தனமா இருக்கு, வேணாம் வலிக்குது அழுதுடுவேன், மாப்பு வச்சுட்டான்டா ஆப்பு, கககப்போ, பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சி, சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு, இந்த குரங்கு பொம்மை என்ன விலை என்று அவரின் பல காமெடிகளும் பிரபலமானவை. 

Vadivelu

இவர் தற்போது வரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பலதரப்பட்ட மக்களால் விரும்பப்பட்ட நகைச்சுவை நடிகர்களில் இவர் முக்கியமானவர் ஆவார். கடந்த 1988 இல் தொடங்கி 2005 வரை நகைச்சுவை நடிகராக நடித்து வந்த வடிவேலு, 2006இல் சங்கரின் தயாரிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சின்ன கவுண்டர், தேவர் மகன், அரண்மனை கிளி, கிழக்கு சீமையிலே, கில்லாடி மாப்பிள்ளை, முத்துக்காளை, முத்து, மைனர் மாப்பிள்ளை, காதல் தேசம், சங்கமம், முதல்வன், பாட்டாளி, தவசி, சுந்தரா ட்ராவல்ஸ், பகவதி, வின்னர், சந்திரமுகி, இங்கிலீஷ் காரன் திமிரு, வாத்தியார், போக்கிரி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், காத்தவராயன், வெடிகுண்டு முருகேசன், கந்தசாமி, ஆதவன், மம்பட்டியான், எலி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது திரையுலக வாழ்க்கையில் பல திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார்.