வாவ்.. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ்.! லீக்கான வீடியோ!! நீங்க பார்த்தீங்களா..

வாவ்.. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ்.! லீக்கான வீடியோ!! நீங்க பார்த்தீங்களா..


hansika-wedding-invitation video viral

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. தொடர்ந்து அவர் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகை ஹன்சிகா தெலுங்கு உள்ளிட்ட பலமொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்யவுள்ளார். அவர்களது திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது. 

இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானியின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டோ ப்ரேம் போல உலோகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அழைப்பிதழை உருவாக்கி இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.