நிச்சியமாக தமிழ்நாட்டில் "ருத்ரதாண்டவம்" திரைக்கு வராது.! பதிலடி கொடுத்த ஹச் ராஜா.!

மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் குறைந்த பட்ஜெட் தொகையில் படமாக்கப்பட்டு கட


h-raja-talk-about-ruthrathandavam-movie

மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் குறைந்த பட்ஜெட் தொகையில் படமாக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாகிய திரைப்படம் திரௌபதி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து வெளிவந்த “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார். ”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இந்து கடவுள்களை கொச்சை படுத்தும் இந்து விரோதிகள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக இந்த ட்ரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்நிலையில் இந்த டிரெய்லரை ஹெச் ராஜா பகிர்ந்து ‘தமிழகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வந்துள்ள ருத்ரதாண்டவம்  வெற்றி பெற்றிட எனது வாழ்த்துக்கள்’ என ஹச் ராஜா வாழ்த்தியுள்ளார். இந்தநிலையில், சிலர் தமிழ் நாட்டில் நிச்சியமாக ருத்ரதாண்டவம் திரைக்கு வாரது என கருத்துக்களை பதிவிட்ட நிலையில், அதற்க்கு பதில் அளித்துள்ள ஹச் ராஜா, "வரும். வரவைப்போம்" என்று பதிலளித்துள்ளார்.