பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தான் ஒரு தீவிரவாதி...! நடிகர் சித்தார்த்...!



h-raja-is-a-terrorist-actor-sidharth

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவர்களை இந்துத்துவா தீவிரவாதி என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த். 
கடந்த பதிமூன்றாம் தேதி அணைத்து இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக விடப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே பள்ளிவாசல் இருக்கும் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான மேடை அமைக்க பாஜகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து இதை கேட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவர்கள் நீங்கள் நடத்துங்கள் ஹைகோர்ட்டாவது ம……வது என்று திட்டிய வீடியோ வெளியாகி வைரலானது. இவ்வாறு உயர் நீதிமன்றத்தை தவறாக தகாத வார்த்தையால் திட்டிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது உயிரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பட்ட அரசியல் தலைவர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில் இதைத் தொடர்ந்து, ‘உயர் நீதிமன்றத்தை நான் திட்டவில்லை. என் குரலை யாரோ எடிட் செய்து பேசியுள்ளார்கள்’ என்று விளக்கம் அளித்துள்ளார் ராஜா.

ஹெச். ராஜாவின் வீடியோவை பார்த்த நடிகர் சித்தார்த் மிகவும் கோபமாகி தனது இணையதள ட்விட் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.  அதில், “போராட்டம் செய்தவர்களை சுட்டுக் கொன்ற தமிழக போலீஸ் உயர்நீதிமன்றம், போலீஸ், சிறுபான்மையினர், முக்கியமாக இந்து மதம் என அனைத்தையும் ஹெச்.ராஜா இழிவாக பேசுவதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இது அவர்களது சார்பு நிலையைக் காட்டுகிறது. இந்த இந்துத்துவா தீவிரவாதி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்” என்று மிகவும் கோபமாகி கொண்டு தந்து இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.